BREAKING: வங்கிகள் வழக்கம்போல் இயங்கும்.. ஸ்டிரைக் ஒத்திவைப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: வங்கிகள் வழக்கம்போல் இயங்கும்.. ஸ்டிரைக் ஒத்திவைப்பு..!!

Published

on

வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை நடத்தத் திட்டமிட்டிருந்த 3 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் இன்றுமுதல் வழக்கம் போல் தடையின்றி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலைநாட்கள் என்ற நடைமுறையை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி, எஞ்சிய சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக அறிவிப்பது குறித்து ஆராய IBA மற்றும் UFBU பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட உள்ளது. இந்த உயர்மட்டக் குழு, வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து தரப்பினரிடமும் ஆலோசித்து ஒரு சுமுகமான தீர்வை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in