CRIME
“என் மகளைக் கொன்றது அவர்தான்..!” 9 நாட்களாகத் தேடப்பட்ட மாணவி… யமுனை ஆற்றங்கரையில் மிதந்த சாக்கு மூட்டை.. போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. திடுக்கிடும் பின்னணி..!!
ஆக்ராவில் தங்கி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த விஷாகா என்ற இளம் பெண், கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் திடீரென மாயமானார். அவரது மொபைல் போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், பதறியடித்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் பல நாட்கள் தேடியும் காவல்துறையினருக்கு எந்தவொரு துப்பும் கிடைக்காமல் இருந்தது.
இந்த நிலையில், மாயமாகி 9 நாட்களுக்குப் பிறகு, இடாவா மாவட்டத்தின் பத்தபுரா காவல் எல்லைக்குட்பட்ட மிஹௌலி கிராமத்தின் அருகே, யமுனை ஆற்றங்கரையில் விஷாகாவின் உடல் ஒரு சாக்கு மூட்டையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவத்திற்கு கிராம வருவாய்த்துறை அதிகாரி தான் காரணம் எனக் பெண்ணின் குடும்பத்தினர் திட்டவட்டமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
