LATEST NEWS
சினிமாவுக்கு விரைவில்…..! டாட்டா பாய் பாய் சொல்ல போகும் நயன்தாரா….. செம ஷாக்கில் ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் ஐயா என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நயன்தாரா. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் முன்னணி ஹீரோகளுடன் ஜோடி போட்டு நடித்தார். சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக பிரபலமான இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வந்தது. அது மட்டும் இல்லாமல் கிளாமரான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். அதன் பிறகு காதல் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கிய இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளும் சரிய தொடங்கியது.
பின்னர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலமாக ரிஎன்றி கொடுத்த இவருக்கு அதன் பிறகு வெற்றி பாதை தான். நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் இவனை காதலித்து வந்தார். ஏழு ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பு மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று வரும் இந்த ஜோடிக்கு ஒரு புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதாவது நயன்தாராவுக்கு வயது அதிகமாக இருப்பதால் குழந்தை பெற்றுக் கொள்வதில் கொஞ்சம் சிக்கல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிரமம் இல்லை. இருப்பினும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தால் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
