LATEST NEWS
சக்க போடு போடும் பொன்னியின் செல்வன்….. முதல் 3 நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?…..!!!!
மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. இந்த திரைப்படம் பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகியுள்ளது. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கார்த்திக், விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.
இந்த திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். விமர்சன ரீதியாக வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை படைத்து வருகின்றது. தமிழ் சினிமாவில் இதுவரை எந்த தமிழ் படமும் படைக்காத சாதனையை இந்த திரைப்படம் படைத்தது. பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் மூன்று நாளில் ரூபாய் 230 கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 70 கோடி வசூல் செய்துள்ளது. தொடர்ந்து காலாண்டு விடுமுறை, விழாக்கால விடுமுறை என்று இருப்பதால் இந்த வார இறுதியில் ரூபாய் 400 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், யூஎஸ், யூகே உள்ளிட்ட நாடுகளிலும் வசூல் சக்க போடு போட்டு வருகின்றது. இது பாக்ஸ் ஆபிஸில் நல்ல இடம்பெற்றுள்ளது.
