LATEST NEWS
துணிவு படத்தில் பிக்பாஸ் காதலர்கள்….. என்னப்பா சொல்றீங்க….. உண்மையாவா?….!!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவரை தற்போது ரசிகர்கள் ஏகே என்று அழைத்து வருகின்றனர். நடிகர் அஜித், வினோத் இயக்கத்தில் ஏகே 61 என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். நடிகர் அஜித், எச் வினோத், போனிகபூர் கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கழித்து அதே கூட்டணியில் வலிமை படம் வெளியானது.
மீண்டும் மூன்றாவது முறையாக இதே கூட்டணியில் ஏகே 61 திரைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த படத்திற்கு துணிவு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் ஒரு ஹீஸ்ட் திரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கின்றார். மேலும் வீரா, சமுத்திரகனி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் நடித்த வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தில் பிக் பாஸ் காதலர்களான அமீர் பாவணி நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் பிக் பாஸ் முடிந்த பிறகும் தொடர்ந்து காதலித்து வருகின்றனர். அவர் மட்டுமல்லாமல் பிக் பாஸ் மூலமாக பிரபலமான சிபியும் இந்த திரைப்படத்தில் நடித்த வருகிறார் என்று கூறப்படுகின்றது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இவர் நடித்திருந்தார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
