ஒன்றாக இணையும் தல-தளபதி…..! அந்த தல இல்லப்பா….! இது செம சூப்பரான விஷயமாச்சே….. ஐ அம் வெயிட்டிங்….!!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒன்றாக இணையும் தல-தளபதி…..! அந்த தல இல்லப்பா….! இது செம சூப்பரான விஷயமாச்சே….. ஐ அம் வெயிட்டிங்….!!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். ரசிகர்களால் செல்லமாக இளைய தளபதி என்று அழைக்கப்படும் இவர் தொடர்ந்து மாஸ் படங்களில் நடித்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் பல விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும் தொடர்ந்து தனது முயற்சியால் முன்னேறி இந்த இடத்திற்கு வந்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியாகின்றது. இதன் மூலமாக இவர் தெலுங்கில் நேரடியாக அறிமுகம் ஆகிறார். வாரிசு திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் சென்டிமென்ட் கலந்து குடும்ப திரைப்படம் என்று கூறி வருகின்றனர். இப்படத்தின் படபிடிப்பின் போது ஒரு விஷயம் நடந்தது. அது என்னவென்றால் விஜய் மற்றும் டோனி ஒரே படபிடிப்பு தளத்தில் இருந்தனர்.

Advertisement

 

இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது. இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்த போட்டோ வைரலானதை போல தற்போது மற்றொரு செய்தியும் வெளியாகி உள்ளது. அதாவது டோனி விஜயின் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தோனி என்டர்டைன்மென்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அதன் மூலம் விஜய் வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளார். தோனியின் ராசியான எண் 7 . அதன் காரணமாக விஜயின் 70 வது படத்தை இவர் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in