LATEST NEWS
தெய்வத்திருமகள் பேபி சாரா இப்போ ஹீரோயினி போல இப்படி வளந்துட்டாங்களே…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் வந்து சென்றாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் சிலர் மட்டுமே உள்ளனர்.
அந்த பட்டியலில் பேபி சாராவும் ஒருவர். இவர் தமிழில் விக்ரம் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான தெய்வத்திருமகள் என்ற திரைப்படத்தில் விக்ரமின் மகளாக நடித்து அசத்தியிருந்தார்.
அந்தத் திரைப்படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பேபி சாரா தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
அந்த திரைப்படத்தில் அப்பா மகள் இடையேயான பாசம் பார்ப்பதற்கு நிஜமான ஒரு அப்பா மகள் போன்ற எண்ணத்தை உருவாக்கியது.
இந்த திரைப்படத்தின் மூலம் பேபி சாராவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
அதன் பிறகு தமிழில் சித்திரையில் நிலா சோறு, சைவம் மற்றும் விழித்திரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.
தற்போது ஹலிதா சமிம் என்ற பெண் இயக்குனர் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்க உள்ளார்.
அதேசமயம் சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மாபெரும் படமாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இளம் வயது நந்தினி கதாபாத்திரத்தில் சாரா அர்ஜுன் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கொட்டேஷன் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். தெய்வதிருமகள் திரைப்படத்தில் சிறுவயது குழந்தையாக நடித்திருந்த சாரா அர்ஜுன் தற்போது இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக வளர்ந்து நிற்கிறார்.
குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாக்கியது மட்டுமல்லாமல் பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பேபி சாரா அர்ஜுனனின் அழகிய புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
