LATEST NEWS
நடிகை சன்னி லியோனின் மூன்று குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!
பாலிவுட் திரை உலகின் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சன்னி லியோன். இவர் ஹிந்தியில் jism 2 என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்த இவர் தன்னுடைய கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
அடுத்ததாக இவர் quotation gang என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் என பழமொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு Daniel Weber என்பவரை காதலை திருமணம் செய்து கொண்டார்.
இந்த காதல் தம்பதிகளுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் கடந்த 2017 ஆம் ஆண்டு 21 மாத குழந்தையாக மகள் நிஷாவை தத்தெடுத்தனர். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பிறந்தனர்.
இந்நிலையில் சினிமாவில் பிஸியாகவும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும் இருந்து வரும் நடிகை சன்னி லியோன் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்டு அழகிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
