LATEST NEWS
வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் இன்னும் குறையல… வைரலாகும் ரஜினியின் லால் சலாம் படப்பிடிப்பு வீடியோ…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரஜினி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ஆக உள்ளது.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ள நிலையில் விரைவில் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ரஜினி தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் மொய்தீன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
அவரின் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட உருவாகி வருகின்றது. இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் ரஜினி ஸ்டைல் குறையாமல் அப்படியே இருப்பதாக கூறி ஆச்சரியப்பட்டு ரசிகர்கள் வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Moideen Bai 💘 pic.twitter.com/aBDHNEEEFL
— Ramesh Kanna (@RameshK76322709) June 13, 2023
