“இப்படியும் ஒரு நூதன திருட்டா..?” தார் காரின் ஸ்பேர் டயரை லாவகமாக அசெம்பிள் செய்த ஸ்கூட்டர் ஆசாமி.. வாயடைத்துப்போன போலீசார்.. இணையத்தில் வைரலாகும் சிசிடிவி..!! – cinefeeds
Connect with us

CRIME

“இப்படியும் ஒரு நூதன திருட்டா..?” தார் காரின் ஸ்பேர் டயரை லாவகமாக அசெம்பிள் செய்த ஸ்கூட்டர் ஆசாமி.. வாயடைத்துப்போன போலீசார்.. இணையத்தில் வைரலாகும் சிசிடிவி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் சந்திராயங்குட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா தார் காரின் கூடுதல் டயரை மிக லாவகமாகத் திருடப்பட்ட விசித்திரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர் ஒருவர், தார் காரின் பின்புறம் மாட்டப்பட்டிருந்த விலையுயர்ந்த ஸ்பேர் டயரை நொடிப் பொழுதில் கழற்றித் திருடிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளார்.

இந்த நூதனத் திருட்டுச் சம்பவம் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. காரின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சந்திராயங்குட்டா போலீசார் சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்தைக் கொண்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஸ்கூட்டர் எண்ணை வைத்தும், சிசிடிவி பதிவுகளை வைத்தும் தார் காரின் டயரைத் திருடிச் சென்ற அந்தத் தந்திரமான திருடனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in