LATEST NEWS
அடடே… நியூ ஜெர்சியில் இப்படியொரு விஷயமா?! அமெரிக்காவிலும் ஒலிக்கும் ‘அம்மா உணவகம்…! அசர வைக்கும் தமிழரின் செயல்..!!
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘அம்மா உணவகம்’ திட்டம், ஏழை எளிய மக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் உணவளித்து பெருமளவில் வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும். இத்திட்டத்தின் மூலம் காலையில் 1 ரூபாய்க்கு இட்லியும், மதிய வேளையில் 5 ரூபாய்க்குத் தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற கலவைச் சாதங்களும், மாலையில் 1.50 ரூபாய்க்குச் சப்பாத்தியும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆட்சி மாற்றங்களுக்குப் பிறகும் இத்திட்டம் தொடர்ந்து மக்களிடையே நல்ல ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர் ஒருவர் ‘அம்மா கிச்சன்’ என்ற பெயரில் ஒரு புதிய உணவகத்தைத் தொடங்கியுள்ளார். உணவகத்தின் முகப்பிலும், உட்புறத்தின் பல்வேறு இடங்களிலும் ஜெயலலிதா அவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
குறைந்த விலையில் மக்களுக்கு உணவளிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில் பரோட்டா, முட்டை மற்றும் கறி உணவுகள் போன்ற சுவையான தென்னிந்திய உணவுகள் வழங்கப்படுகின்றன. அங்குச் சென்று உணவருந்திய ஒருவர் தனது அனுபவத்தைச் சமூக வலைத்தளங்களில் வீடியோவாகப் பகிர, அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
