நடிகர் அஸ்வின் ககுமானுவிற்கு பிறந்த இரண்டாவது குழந்தை…. அவரே பகிர்ந்த க்யூட் புகைப்படங்கள்…. ரசிகர்கள் வாழ்த்து….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் அஸ்வின் ககுமானுவிற்கு பிறந்த இரண்டாவது குழந்தை…. அவரே பகிர்ந்த க்யூட் புகைப்படங்கள்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் நடிகர் அஸ்வின் ககுமானு.

இவர் முதல் முதலில் தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நடுநிசி நாய்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்த மங்காத்தா திரைப்படத்தில் இவர் போலீசாக நடித்திருந்தார்.

அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

அதன்படி சூர்யாவுடன் ஏழாம் அறிவு, விஜய் சேதுபதியின் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடிகர் கார்த்தியின் பிரியாணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

அதே சமயம் மேகா மற்றும் ஜீரோ ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அந்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

Advertisement

குறிப்பாக மேகா திரைப்படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை என்ற ரீமேக் பாடலும், ஜீரோ திரைப்படத்தில் இடம் பெற்ற உயிரே பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நடிகர் அஸ்வின் ககுமானு இறுதியாக மணிரத்தினம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

அந்த திரைப்படத்தில் இவர் கார்த்தியின் நண்பனாக சேந்தன் அமுதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவரின் நடிப்பில் தற்போது பீட்சா 3 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அஸ்வின் ககுமானு கடந்த 2016 ஆம் ஆண்டு சோனாலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு அவிரா ரூபி என்ற பெண் குழந்தை பிறந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி இந்த தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Advertisement

குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து இந்த செய்தியை அஸ்வின் வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in