20வது திருமண நாளை கொண்டாடிய நடிகர் போஸ் வெங்கட் – சோனியா தம்பதி…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

20வது திருமண நாளை கொண்டாடிய நடிகர் போஸ் வெங்கட் – சோனியா தம்பதி…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் நுழைந்து தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர்கள் பலரும் உள்ளனர். சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் பல கதாபாத்திரங்களில் நடித்த தற்போது பெரும் புகழும் கொண்டிருந்தாலும் ஒரு காலத்தில் அவர்கள் ஏதாவது ஒரு துணை கதாபாத்திரத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் தான்.

அப்படி கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் போஸ் வெங்கட்.

Advertisement

அதன் பிறகு தமிழ் சினிமாவில் நுழைந்து வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக இன்றுவரை கலக்கிக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் போஸ் வெங்கட்.

Advertisement

இவர் சினிமா பயணத்தை தொடங்கி நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் தன்னை உயர்த்தியுள்ளார்.

அதேசமயம் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் நல்ல டப்பிங் கலைஞராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

இவர் படங்களைத் தாண்டி பல சூப்பர் ஹிட் சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement

இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு நடிகை சோனியாவை திருமணம் செய்து கொண்டார்.

இவரின் மனைவி சோனியாவும் பல சீரியல்கள் மற்றும் படங்களில் பிசியான நடிகை தான். இன்றும் சன் டிவியில் பல சீரியல்களில் இவர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Advertisement

இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர்கள் அடிக்கடி தங்களின் குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம்.

அதன்படி போஸ் வெங்கட் மற்றும் சோனியா தம்பதி தங்களின் 20வது திருமண நாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in