LATEST NEWS
கணவருடன் அவுட்டிங் சென்ற அழகிய புகைப்படங்களை பகிர்ந்த…. நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி. இவர் தனது தந்தையின் தயாரிப்பிலும் சகோதரர் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
ரவி நடித்த முதல் திரைப்படமே மக்கள் மத்தியில் பிரபலமானதால் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார்.
தற்போது இவர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகின்றார் . இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர்.
இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் பூமி. விவசாய பிரச்சனையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அகிலன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை ஜெயம் ரவி திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது ஆரவ் ரவி மற்றும் அயான் ரவி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பார்ப்பதற்கு ஹீரோயினி போலவே செம்ம அழகாக இருக்கக்கூடியவர்.
ஜெயம் ரவியின் நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாக உள்ளது.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் தற்போது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதியினர் ஒன்றாக எடுத்துக் கொண்ட சில அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
