வெளிநாட்டில் காதலியுடன் ஊர் சுற்றும் நடிகர் காளிதாஸ் ஜெயராம்…. வெளியான புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெளிநாட்டில் காதலியுடன் ஊர் சுற்றும் நடிகர் காளிதாஸ் ஜெயராம்…. வெளியான புகைப்படங்கள்….!!!!

Published

on

தற்போது மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் காளிதாஸ் ஜெயராம்.

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான ஜெயராமனின் மகன் தான் இவர். காளிதாஸ் ஜெயராம் தற்போது மலையாளத்தை விட தமிழில் முக்கியத்துவம் கொடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

கடந்த சில வருடங்கள் வரை இவருக்கு மிகப்பெரிய பிரேக் எதுவும் கிடைக்காத நிலையில் கடந்த வருடம் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான தங்கம் என்கிற அந்தாலஜி படம், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்தது என தற்போது இவரது திரையுலக பயணத்தில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

Advertisement

இவர் தனது குடும்பத்துடன் சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தார்.

அந்த புகைப்படத்தில் ஜெயராம் குடும்பத்துடன் குடும்ப உறுப்பினர்களை தவிர ஒரு இளம் பெண்ணும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

Advertisement

அந்தப் பெண் யார் என்று அனைவர் மனதிலும் கேள்வி எழுந்த நிலையில் அவரைப் பற்றிய விவரங்கள்  வெளியானது.

அதாவது அவர் தாரணி காளிங்கராயர் என்ற மாடல் தான். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் என்ற அழகி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதனிடையே  காதலர் தினத்தில் காளிதாஸ் தான் சிங்கிள் இல்லை என அறிவித்தார். தன்னுடைய காதலி தாரிணி கலிங்கராயருடன் அவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

இந்நிலையில் தற்போது தனது காதலியுடன்  காளிதாஸ் ஜெயராம்  வெளிநாட்டில் ஊர் சுற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in