அட கயல் பட ஹீரோவின் மனைவி பிரபல தொகுப்பாளினியா?…. வெளியான அழகிய குடும்ப புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட கயல் பட ஹீரோவின் மனைவி பிரபல தொகுப்பாளினியா?…. வெளியான அழகிய குடும்ப புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கயல் சந்திரன் தற்போது வெங்கட் பிரபு உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து திரைப்படங்களில் பணியாற்றி வருகின்றார்.

இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் பிரபு சாலமன் இயக்கிய கயல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

Advertisement

2004 ஆம் ஆண்டு உலகை ஆட்டி படைத்த மிகப்பெரிய பேரழிவாக உருவான சுனாமியையும் அழகான காதலை மையமாகக் கொண்டு உருவான கயல் திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அந்தத் திரைப்படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

அதேசமயம் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பல்வேறு குறும்படங்களிலும் இவ்வாறு நடித்துள்ளார்.முதலில் பிரபல ரேடியோ ஸ்டேஷன் ஒன்றில் பணியாற்றி வந்த சந்திரன் கயல் திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் நுழைந்தார்.

அறிமுக நாயகன் என்ற எந்த ஒரு சாயலும் இல்லாமல் தனது பிரதான நடிப்பை வெளிப்படுத்தினார்.

Advertisement

தனது இயல்பான நடிப்பால் முதல் திரைப்படத்தில் மக்களை வெகுவாக கவர்ந்த இவர் ரூபாய் மற்றும் திட்டம் போட்டு திருடற கூட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான பாட்டு என்ற திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் சந்திரன், சன் மியூசிக் இல் பிரபல தொகுப்பாளராக பணியாற்றி வந்த விஜே அஞ்சனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

முதலில் முன்னணி நடிகர் நடிகைகளை பேட்டி எடுத்து வந்த அஞ்சனா தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதேசமயம் சினிமா நிகழ்ச்சிகள் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார். இவரும் கயல் சந்திரனும் கடந்த 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2018 ஆம் ஆண்டு இவர்களுக்கு ருத்ராக்ஸ் என்ற ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

Advertisement

தற்போது கயல் சந்திரன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வர அஞ்சனாவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கயல் சந்திரன் மற்றும் அஞ்சனா தம்பதியின் அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in