மறைந்த நடிகர் மனோபாலாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வெளியான குடும்ப புகைப்படம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த நடிகர் மனோபாலாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வெளியான குடும்ப புகைப்படம்….!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் மனோபாலா. இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சிஷ்யனாக அவரின் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர்தான் மனோபாலா.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல திறமைகளை வெளிக்காட்டியுள்ளார். 69 வயதாகும் இவருக்கு கடந்த ஜனவரி மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

அதன் பிறகு இவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையும் செய்யப்பட்டது. அதன் பிறகு திரை பணிகளை கவனித்து வந்த மனோபாலா கல்லீரல் பாதிப்பால் கடந்த 15 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்றே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரின் இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ள நிலையில் பலரும் தங்கள் இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மனோபாலா குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in