திடீரென டெலிவரி பாயாக மாறிய நடிகர் மைக் மோகன்… என்ன காரணம்?.. வெளியான புகைப்படம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீரென டெலிவரி பாயாக மாறிய நடிகர் மைக் மோகன்… என்ன காரணம்?.. வெளியான புகைப்படம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் 80 மட்டும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் மோகன். இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் ஆகவும் கொடிகட்டி பறந்தார். இவரை மைக் மோகன் என்றுதான் பலரும் அழைப்பார்கள். இவர் இன்றும் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

1977 ஆம் ஆண்டு கோகிலா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் தமிழில் அதிகம் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நிறைய படங்களில் பாடகராகவும் இவர் கலக்க ஒரு காலத்தில் மைக் மோகன் என பிரபலமானார். அதன் பிறகு பல வதந்திகள் மற்றும் பிரச்சனையில் சிக்கியதால் சினிமா பயணம் அப்படியே முடிந்தது.

Advertisement

இந்நிலையில் மைக் மோகன் பல வருடங்களுக்குப் பிறகு தற்போது ஹரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். விஜய் ஸ்ரீ இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, குஷ்பு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் வனிதா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் மோகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது கனவு நனவாகிவிட்டது என தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தில் மோகன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் டீ சர்டில் உள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு என்ன ஆகிவிட்டது திடீரென டெலிவரிபாயாக மாறிவிட்டாரே என கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Vanitha Vijaykumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vanithavijaykumar)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in