நடிகர் ராகவா லாரன்ஸின் மனைவி இவர்தானா… இணையத்தில் வெளியான புகைப்படம்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் ராகவா லாரன்ஸின் மனைவி இவர்தானா… இணையத்தில் வெளியான புகைப்படம்..

Published

on

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர், சமூக ஆர்வலர் என பன்முகங்களுடன் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் ராகவா லாரன்ஸ்.  நடிகராக மட்டுமின்றி இவர் இயக்கிய திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இவர் தனது அறக்கட்டளை மூலம் பல மாற்றத்திறனாளிகளுக்கு பல வகைகளில் உதவி வருகிறார். அது மட்டும் இல்லாமல் தன் வீட்டிலேயே பல மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் அனாதை குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த முனி காஞ்சனா போன்ற பேய் படங்களின் மூலம் தான் அனைவருக்கும் பிடித்த நடிகராக மாறியுள்ளார்.

Advertisement

இவர் நடிப்பில் அடுத்ததாக சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து ஜிகர்ந்தாண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நயன்தாராவும் நடிக்கிறார். இப்படி தொடர்ந்து பிஸியான நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் விரைவில் தன்னுடைய காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தை இயக்குவேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராகவா லாரன்ஸ் லதா தம்பதியினருக்கு ராகவி என்ற மகள் உள்ளார். தற்பொழுது நடிகர் ராகவா லாரன்ஸ் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அட  இவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸின் மனைவியா?’ என்று ரசிகர்கள் இப்புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in