நடிகர் அரவிந்த் சாமியின் நிஜ தந்தை இந்த பிரபல சீரியல் நடிகரா?… பலவருடம் கழித்து வெளிவந்த பலரும் அறிந்திடாத உண்மை… - Cinefeeds
Connect with us

CINEMA

நடிகர் அரவிந்த் சாமியின் நிஜ தந்தை இந்த பிரபல சீரியல் நடிகரா?… பலவருடம் கழித்து வெளிவந்த பலரும் அறிந்திடாத உண்மை… 

Published

on

வயதானாலும் தமிழ் திரையுலகில் தனது இளமையை கட்டுக்கோப்பாக வைத்து நடித்து வரும் நடிகர் தான் அரவிந்த்சாமி. இவர் தமிழ் திரை உலகில் நிறைய திரைப்படங்களில் நடித்த ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். குறிப்பாக ஒரு திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘தளபதி’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து ‘ரோஜா’ திரைப்படத்தில் நடித்ததின் மூலம் மிகப் பிரபலம் அடைந்தார். இவரின் நடிப்பு திறமையை கண்டு பெரிதும் பாராட்டப்பட்ட திரைப்படம் தனி ஒருவன் மற்றும் செக்கச்சிவந்த வானம். இந்நிலையில் நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் நரகாசுரன், கள்ளபார்ட், சதுரங்க வேட்டை 2, வணங்கும் முடி போன்ற திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவருக்கு இரண்டு திருமணம் நடைபெற்றது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் இவர் 1994 இல் காயத்ரி ராமமூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆதிரா என்று மகளும், ருத்ரா என்ற மகனும் உள்ளனர். நடிகர் அரவிந்த்சாமி தனது முதல் மனைவியை 2010ல் விவாகரத்து செய்தார். இதை தொடர்ந்து 2012 இல் அபர்ணா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது நடிகர் அரவிந்த்சாமியின் உண்மையான தந்தை பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. நம்மில் பலருக்கு அரவிந்த் சாமியின் தந்தை V.D. சாமி என்று தான் தெரியும். ஆனால், அவர் அரவிந்த் சாமியின் தந்தை இல்லையாம். பிரபல சீரியல் நடிகர் டெல்லி குமார் தான் அரவிந்த் சாமியின் உண்மையான தந்தை என்று கூறப்படுகிறது. அதை நடிகர் டெல்லி குமார் பேட்டி ஒன்றில் ‘அரவிந்த் சாமி தனக்கு பிறந்தவர் என்றும், அவர் பிறந்தவுடன் தத்து கொடுத்துவிட்டதாகவும் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.