80ஸ் நடிகர் ராஜேஷுக்கு இவ்வளவு அழகான மகளா?… வைரலாகும் அழகிய திருமண புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

80ஸ் நடிகர் ராஜேஷுக்கு இவ்வளவு அழகான மகளா?… வைரலாகும் அழகிய திருமண புகைப்படங்கள்…!!

Published

on

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகராக 80களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் ராஜேஷ்.

இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான கன்னிப்பருவத்திலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

Advertisement

தனது பள்ளி படிப்பை காரைக்குடியில் முடித்த இவர் சென்னையில் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். அதன் பிறகு சிறிது காலம் இவர் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

தென்னிந்திய சினிமா அளவில் அன்று முதல் இன்று வரை குணச்சித்திர வேடங்கள் மற்றும் கதாநாயகன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

Advertisement

இவர் இதுவரை 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சினிமாவில் கிட்டத்தட்ட இவர் 45 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்ட நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றிய ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே இவர் கடந்த 1983 ஆம் ஆண்டு பிரபல சமூக சீர்திருத்தவாதியும் திராவிட தலைவருமான பட்டுக்கோட்டை டேவின் பேத்தியான ஜோன் சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இந்த தம்பதிகளுக்கு தற்போது திவ்யா என்ற மகளும் தீபக் என்ற மகனும் உள்ளனர். இதனிடையே ராஜேஷ் மனைவி செல்வியாக கடந்த 2012 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இவர்களின் மகனான தீபக் ராஜேஷ் அவர்கள் பயணங்கள் தொடர்கின்றன என்ற ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

Advertisement

இவர்களின் மகள் திவ்யாவிற்கு கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்தில் நடிகர் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல முன்னணி திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தற்போது ராஜேஷின் மகளின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in