LATEST NEWS
அட படு ஒல்லியாக ஆள் அடையாளம் தெரியாமல் இருந்த நடிகர் சந்தானமா இது?… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!
தமிழ் சினிமாவில் முன்னாடி காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாக திகழ்பவர் நடிகர் சந்தானம். எப்பொழுதும் திரைப்படங்களில் கவுண்டர் டயலாக்குகளுடன் அனைவரையும் சிரிக்க வைக்கும் சந்தானம் சில வருடங்களாக ஹீரோவாக களமிறங்கியுள்ளார். அவர் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர் நடிப்பில் வெளியான குலு குலு திரைப்படத்தில் ஆக்சன் கிங் போல சந்தானம் களமிறங்கியுள்ளார். ஒரு பக்கம் ஹீரோவாகவும் மறுபக்கம் காமெடி நடிகராகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவரின் நடிப்பில் கிக் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படம் மட்டுமல்லாமல் இன்னும் சில திரைப்படங்களையும் சந்தானம் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஒல்லியாக காணப்பட்ட நடிகர் சந்தானம் தற்போது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சந்தானம் ஹேண்சம் ஆக உள்ளார்.
