LATEST NEWS
புதிய கார் வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் கண்ணன்…. அவரே பகிர்ந்த புகைப்படம்….!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் அண்ணன் தம்பி மற்றும் கூட்டு குடும்ப கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால் இதற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது சீரியலில் அண்ணன் தம்பி பிரிவுகள் நிகழ அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் கடைக்குட்டி கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் சரவண விக்ரம். இவருக்கு விஜய் டெலிவிஷன் விருது சிறந்த துணை கதாபாத்திரத்திற்காக விருது கிடைத்துள்ளது. அதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அவர் பகிர்ந்து உள்ளார்.
அதாவது அவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். காருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
