LATEST NEWS
திருமணமாகி 14 வருடங்கள் கழித்து அம்மாவான கமல் பட நடிகை…. வைரலாகும் புகைப்படம்….!!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை அபிராமி. இவர் மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.
அந்த திரைப்படத்திற்கு பிறகு சினிமாவில் மிகப்பெரிய கேரியர் கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு இவர் சினிமாவை ஓரங்கட்டிய நிலையில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் தென்னிந்தியா சினிமா படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் ராகுலை திருமணம் செய்து சுமார் 14 வருடங்கள் கழித்து அபிராமி தற்போது ஒரு குழந்தையை தத்து எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு பெண் குழந்தைக்கு அப்பா அம்மாவாக மாறி இருக்கிறோம் என அவர் பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வர பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
