LATEST NEWS
நடிகர் சத்யராஜ் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்… கடும் சோகத்தில் குடும்பம்… திரை பிரபலங்கள் இரங்கல்…!!!
தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்துள்ளார். அவர் அந்த காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்தவர். தற்போதும் கூட பல படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் அப்போது இருந்த நடிப்பின் வலிமை இப்போதும் சத்யராஜ் நடிப்பில் உள்ளது. சத்யராஜுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகன் சிபிராஜ் தனது தந்தையை போலவே சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் சினிமா பக்கம் வராத சத்யராஜ் மகள் திவ்யா படித்து முடித்து சில மாதங்களில் இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிஷன் ஒருவர்களில் ஒருவராக மாறிவிட்டார். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் அம்மா நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். 94 வயதாகும் இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க