VIDEOS
இனிமேல் பாக்கியலட்சுமி சீரியலில் நான் கோபி இல்லை…. கண் கலங்கியபடி வீடியோ வெளியிட்ட நடிகர் சதீஷ்…!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தினம் தோறும் புது விதமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சீரியலின் கதாநாயகன் ஆன கோபி தனது குடும்பத்தை விட்டுவிட்டு ராதிகா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் பாக்யா தன்னந்தனியாக நின்று குடும்பத்தை கவனித்து வந்தார்.
தற்போது சீரியலில் பாக்கியா வீட்டிற்கு சென்ற கோபியோடு ராதிகாவும் இருக்கும் எபிசோடு காட்சிகள் ஒளிபரப்பாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தன. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து தான் சில எபிசோடுக்கு பிறகு விலகி உள்ளதாக என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் தெரிவித்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல் இந்த அளவிற்கு பிரபலமாக கோபி கதாபாத்திரம் தான் முக்கிய காரணம். தற்போது அவர் தனிப்பட்ட காரணத்திற்காக இனிமேல் கோபியாக தன்னால் நடிக்க முடியாது என்று கண்ணீர் விட்டபடி எமோஷனலாக பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வேண்டாம் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
