LATEST NEWS
அட நடிகர் சிவகார்த்திகேயன் மகனா இது?… நல்லா வளந்துட்டாரே… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!!
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன. மிமிக்ரி செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இறுதியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது. அடுத்ததாக அயலான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மகன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மகன் பிறந்த நிலையில் இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ளார். தற்போது மகன் நடந்து செல்லும் புகைப்படத்தை பதிவிட்டு “நீ நடந்தால் நடை அழகு” என சிவகார்த்திகேயன் குறிப்பிட்ட அந்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
