சிவாஜி பட வில்லன் நடிகர் சுமனின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிவாஜி பட வில்லன் நடிகர் சுமனின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…!!

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இன்றும் திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சுமன். இவர் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் பெரும்பாலும் பல திரைப்படங்களில் வில்லனாகத்தான் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்களில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார்.

Advertisement

இவர் 80-களில் இளமை கோலம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில் எல்லாம் இன்பமயம் மற்றும் டார்லிங் டார்லிங் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் வில்லனாக நடித்து வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு படத்தில் கலக்கினார்.

அதாவது நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார்.

Advertisement

அந்த திரைப்படம் தான் இவரின் திரை பயணத்தில் இவரை முன்னணி வில்லன் நடிகராக கொண்டு சென்று பல புகழை சேர்த்தது.

அந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்புக்கு பல பாராட்டுகள் கிடைத்த நிலையில் இவருக்கு ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

Advertisement

தற்போது இவர் ஒரு சில திரைப்படங்களில் தமிழில் நடித்துக் கொண்டிருந்தாலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவே கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சுமன் சிரிஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் உள்ளார்.

Advertisement

நடிகர் சுமனின் மனைவி டோலிவுட் பிரபல எழுத்தாளர் டிவி நரசராஜாவின் பேத்தி ஆவார். நடிகர் சுமன் திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலும் ஈடுபட்டார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த இவர் அன்றைய முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு நம்பிக்கையுடன் இருந்தார். தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்.

Advertisement

இந்நிலையில் நடிகர் சுமணியின் திருமண புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது.

இவரின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in