LATEST NEWS
நடிகர் வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி தம்பதிக்கு டும்டும்…. திருமணம் எப்போது தெரியுமா…???
தமிழில் நடிகர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான பிரம்மன் திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை லாவண்யா திரிபாதி. தற்போது இவர் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் தணல் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். அதே சமயம் தெலுங்கில் அண்டாலா ரக்ஷனி என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இதனிடையே பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜாவை இவர் காதலித்து வருவதாக செய்திகள் இணையத்தில் உலா வந்தன. இவர்கள் இருவரும் இணைந்து அந்தாரிக்ஷம் மற்றும் மிஸ்டர் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் லாவண்யா த்ரி பாதி மற்றும் வருண் தேஜாவுக்கு இன்று ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து இவர்களின் திருமணம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. அவர்களின் நிச்சயதார்த்த அழைப்புதல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
