பிரம்மாண்டமாக நடந்து முடிந்த வருண் தேஜ் – லாவண்யா த்ரிபாதி நிச்சயதார்த்தம்…. வெளியான புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த வருண் தேஜ் – லாவண்யா த்ரிபாதி நிச்சயதார்த்தம்…. வெளியான புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழில் நடிகர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான பிரம்மன் திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை லாவண்யா திரிபாதி. தற்போது இவர் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் தணல் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

அதே சமயம் தெலுங்கில் அண்டாலா ரக்ஷனி என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Advertisement

இதனிடையே பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜாவை இவர் காதலித்து வருவதாக செய்திகள் இணையத்தில் உலா வந்தன. இவர்கள் இருவரும் இணைந்து அந்தாரிக்ஷம் மற்றும் மிஸ்டர் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் லாவண்யா த்ரி பாதி மற்றும் வருண் தேஜாவுக்கு நேற்று ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

Advertisement

தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in