LATEST NEWS
6 முதல் 60 வரை… விஜய் மாணவர்கள் சந்திப்பில் நடந்த நெகிழ்ச்சி தருணங்கள்… வெளியான அழகிய புகைப்படங்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சினிமாவில் பிஸியாக இருந்தாலும் நடிகர் விஜய் தன் தொண்டர்கள் மூலமாக பல சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகின்றார்.
அதாவது ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என பல பணிகளை ரசிகர்களை சந்தித்து செய்து வருகிறார்.
அதேசமயம் விஜய் விரைவில் அரசியலுக்கு வர வேண்டுமென ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் அதற்காக போஸ்டர் ஒட்டியும் அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் விஜயின் பிறந்தநாள் சமயத்தில் ஏதாவது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்.
இந்நிலையில் கடந்த கல்வியாண்டில் நடந்து முடிந்த 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை விஜய் சந்திக்க உள்ளதாக ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பரிசு மற்றும் உதவித்தொகை வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் நேற்று இந்த விழாநடைபெற்றது.
இதற்காக சுமார் 1500 மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் வருகை தந்தனர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு நடிகர் விஜய் வருகை தந்தார். அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சுமார் 7 மணி நேரம் மேடையில் நின்று சிரித்த முகத்துடன் சான்றிதழ்கள் மற்றும் பரிசு தொகையை விஜய் வழங்கினார்.
அதேசமயம் மாற்றுத்திறனாளி மாணவிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கிச் சென்று சான்றிதழ் வழங்கிய விஜயின் செயல் பலரையும் நெகிழ வைத்தது.
அதேசமயம் மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள் அனைவரும் மேடையில் மிகுந்த உற்சாகத்துடன் விஜய் இடம் கைகுலுக்கி மற்றும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது என பல நெகிழ்ச்சியான செயல்களில் ஈடுபட்டனர்.
அது தொடர்பான சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
