LATEST NEWS
சாதனை மாணவர்களுக்கு பிரம்மாண்ட விழா… மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் விஜய்… வெளியான புகைப்படங்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சினிமாவில் பிஸியாக இருந்தாலும் நடிகர் விஜய் தன் தொண்டர்கள் மூலமாக பல சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகின்றார்.
அதாவது ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என பல பணிகளை ரசிகர்களை சந்தித்து செய்து வருகிறார்.
அதேசமயம் விஜய் விரைவில் அரசியலுக்கு வர வேண்டுமென ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் அதற்காக போஸ்டர் ஒட்டியும் அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் விஜயின் பிறந்தநாள் சமயத்தில் ஏதாவது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்.
இந்நிலையில் கடந்த கல்வியாண்டில் நடந்து முடிந்த 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை விஜய் சந்திக்க உள்ளதாக ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பரிசு மற்றும் உதவித்தொகை வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் இன்று இந்த விழா நடைபெறுகிறது. எதற்காக சுமார் 1500 மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் வருகை தந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு நடிகர் விஜய் வருகை தந்துள்ளார்.
அங்குள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து விஜயை வரவேற்றனர். தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
