LATEST NEWS
ரசிகருக்கு நன்றி தெரிவித்து விஜய் கைப்பட எழுதிய கடிதம்… இணையத்தில் தீயாய் பரவும் செய்தி..!!
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இளைய தளபதி என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் இறுதியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே விஜய் கடந்த ஜூன் 22 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதற்கு முன்பாக தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்கத்தொகை வழங்கினார். அது மட்டும் அல்லாமல் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பல உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விஜய் தன்னுடைய ரசிகர் ஒருவரை பாராட்டி கடிதம் ஒன்றை கைப்பட எழுதி அனுப்பியுள்ளார். அதில் தன்னுடைய பிறந்தநாள் அன்று செய்த பணிகளுக்காக பாராட்டு தெரிவித்து அவர் அனுப்பியுள்ள கடிதம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
