LATEST NEWS
அச்சு அசல் விமல் போலவே இருக்கும் மகன்… லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் இடத்தை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் தான் நடிகர் விமல். இவர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கிரீடம்,குருவி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தார்.
இவர் முதல் முதலாக 2009 ஆம் ஆண்டு பசங்க திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து களவாணி,கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகராக நடித்துள்ளார்.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான தெய்வ மச்சான் மற்றும் குலசாமி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சில திரைப்படங்களில் விமல் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விமல் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விமலுக்கு இவ்வளவு பெரிய மகனா எனக் கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
