LATEST NEWS
திடீரென தளபதி விஜய்யை நேரில் சந்தித்த நடிகர் விஷால்…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான லத்தி திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றி பெறவில்லை.
அடுத்ததாக விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
இந்த திரைப்படத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில், பி எஸ் ஜி, ரிது வர்மா உட்பட பலரும் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஆதிக் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த டீசரை விஜய் இடம் காண்பித்து விஷால் உட்பட பட குழுவினர் வாழ்த்து பெற்றனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த சந்திப்பின்போது விஜய்க்காக இரண்டு கதைகள் தயார் செய்து வைத்திருப்பதாகவும் அதில் அவர் நடிக்க வேண்டும் என்றும் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதனை ஏற்ற விஜய் கதை தயாரானதும் கூறுங்கள் கண்டிப்பாக நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்று உறுதி அளித்துள்ளதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.
