LATEST NEWS
நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியா இது?…. 37 வருடங்களுக்கு முன்பு எப்படி இருக்காங்கன்னு பாருங்க….!!!
கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டு கிரிக்கெட் வீரராக இருக்க வேண்டிய இவர் தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர்தான் நடிகர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக இவரின் நடிப்பில் மோகன்தாஸ், ஆரியன் மற்றும் லால் சலாம் போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவரின் சிறு வயது புகைப்படம் அதாவது 37 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
