கொரோனாவால் உயிரிழந்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?…. இதோ ஒரு சிறப்பு தொகுப்பு…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கொரோனாவால் உயிரிழந்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?…. இதோ ஒரு சிறப்பு தொகுப்பு…!!!

Published

on

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பாதிப்பு மக்களை வாட்டி வயது கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் திரை பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அப்படி கொரோனாவால் உயிரிழந்த நடிகர்கள் யார் யார் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

நடிகர் பாண்டு:

Advertisement

தமிழ் திரைப்பட நகைச்சுவைநடிகரும் ஓவியருமான நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் உயிரிழந்தார். இவருக்கு வயது 74.

நடிகர் நிதிஷ் வீரா:

Advertisement

பிரபல தமிழ் திரைப்பட நடிகரான இவர் புதுப்பேட்டை மற்றும் வெண்ணிலா கபடி கூட உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் உயிரிழந்தார்.

நடிகர் பவுன்ராஜ்:

Advertisement

நகைச்சுவை நடிகரும் இயக்கணருமான பொன்ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பவுன்ராஜ்ரஜினி முருகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.

நடிகர் மாறன்:

Advertisement

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் உயிரிழந்தார். இவருக்கு வயது 48.

நடிகர் ருபன் ஜே:

Advertisement

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் சிறிய குணசேத்திர வேடங்களில் நடித்து வந்தவர் தான் பிரபல எழுத்தாளரான ரூபன். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். இவருக்கு வயது 54.

நடிகர் நெல்லை சிவா:

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் தான் நெல்லை சிவா. இயக்குனர் பாண்டியராஜனின் ஆண்பாவம் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 2021 ஆம் ஆண்டு மே மாதம் உயிரிழந்தார். இவருக்கு வயது 69.

எஸ் பி பாலசுப்பிரமணியம்:

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி பாடகராக கொடிகட்டி பறந்தவர் தான் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.

வசந்தகுமார்:

Advertisement

காங்கிரஸ் எம் பி யும் வசந்த் அண்ட் கோ உரிமையாளருமான வசந்தகுமார் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு வயது 70.

இயக்குனர் கே வி ஆனந்த்:

Advertisement

திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அயன், கோ, மாற்றான் மற்றும் காவல் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். 54 வயதான இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிரிழந்தார்.

நடிகர் அருண் ராஜா காமராஜ் மனைவி:

Advertisement

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர் தான் அருண் ராஜா காமராஜ். இவரின் மனைவி சிந்துஜா கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 38.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in