LATEST NEWS
அட நடிகை வனிதாவின் மூத்த மகளா இது?… இப்படி வளந்துட்டாங்களே… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவ்வாறு திருமணத்திற்கு பிறகு நடிப்பை ஓரம் கட்டினார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தால் இரண்டு முறை விவாகரத்து செய்து பிரிந்தார்.
தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த இவர் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
தற்போது தனது மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதா இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதே சமயம் யூட்யூபிலும் வீடியோக்களையும் பகிர்ந்து வருவது வழக்கம். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வனிதா தற்போது அவரின் மூத்த மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் வனிதா பக்கத்தில் நிற்கும் அவரின் மகள் அவரை விட உயரமாக உள்ளார். இதனைப் பார்த்த இணையவாசிகள் உங்களைவிட உங்கள் மகள் பெரிய ஆளாக வருவார் என்று கருத்துக்களை கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
