குடும்பத்துடன் ஜாலியாக விடுமுறையை கொண்டாடிய நடிகை விஜயலட்சுமி…. வெளியான அழகிய புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குடும்பத்துடன் ஜாலியாக விடுமுறையை கொண்டாடிய நடிகை விஜயலட்சுமி…. வெளியான அழகிய புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் விஜயலட்சுமி.

இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் அடுத்தடுத்து அஞ்சாதே, வனயுத்தம் மற்றும் கற்றது கையளவு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

என்னதான் இவர் பல படத்தில் நடித்திருந்தாலும் இவரை பிரபலமாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

இதற்கு அடுத்தபடியாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி கலக்கினார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைபடங்களில் தற்போது பிசியாக நடித்து வருகின்றார்.

விஜயலட்சுமி அவர்கள் 2015ஆம் ஆண்டு பள்ளி நண்பரும், இயக்குனருமான பெரோஸ் முகமதுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் விஜயலட்சுமி அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி சமீபத்தில் தனது கணவர் சொகுசு பைக் ஒன்றை வாங்கியிருந்த நிலையில் அவருடன் அவுட்டிங் சென்ற புகைப்படங்களை வெளியிட்டார்.

Advertisement

தற்போது விடுமுறையை கொண்டாட தனது அக்கா கனி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் அவுட்டிங் சென்றுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்களை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in