LATEST NEWS
அந்த இடத்தில் டாட்டூ போட்ட தனுஷ் பட நடிகை… போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!!
மலையாளத்தில் வெளியான ப்ரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்தத் திரைப்படம் மலையாளத்தில் வெளியானாலும் உலகம் முழுவதும் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.
ஆனால் அதற்குப் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் தமிழில் அதிக அளவு கிடைக்காத நிலையில் தெலுங்கு மற்றும் கன்னடாம உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். தெலுங்கில் இவர் நடித்த தேஜ் ஐ லவ் யூ, உன்னடி ஒகடே சிந்தகி உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால், இவருடைய கவர்ச்சிக்கு சில படங்கள் கைவசம் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் அனுபவமா வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நெஞ்சுக்குளியில் டாட்டூ போட்டுக் கொண்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்து உள்ளார். அவர் ஏற்கனவே வலது புற மார்பில் டாட்டூ போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இளம் தலைமுறையினர் டாட்டூ போட்டுக் கொள்வது பிடித்தமான ஒன்றாக இருந்தாலும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் ஏராளம் என்பதை யாரும் உணர்வதில்லை. தற்போது அனுபமாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
