LATEST NEWS
அட 96 படத்தில் நடித்த சிறுமியா இது?… ஹீரோயின் ரேஞ்சுக்கு இப்படி மாறிட்டாங்களே… லேட்டஸ்ட் புகைப்படம்..!!
கல்லூரி படிக்கும் போதே தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதன் பிறகு கனவுகள் இலவசம் என்ற சீரியலில் அறிமுகமானவர்தான் நடிகை தேவதர்ஷினி. படித்துக் கொண்டிருக்கும் போதே மர்மதேசம் தொடரில் நடிக்க தொடங்கி பிறகு எம் காம் படிப்பை தொலைநிலைக் கல்வியில் முடித்தார்.
இவருக்கு அடுத்தடுத்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் மர்ம தேசம் தொடரில் நடித்த போது தன்னுடன் நடித்த சேத்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தனது நடிப்பை தொடர்ந்ததால் தற்போது ஒரு நடிகையாக நிலைத்து நிற்கிறார்.
பல திரைப்படங்களில் காமெடி நடிகையாக நடித்து அசத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சிறப்பு நடிப்புக்காக பல்வேறு விருதுகளை வாங்கியுள்ள தேவதர்ஷினி தற்போது தன்னுடைய மகள் ஹீரோயினி லுக்கில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். தேவதர்ஷினியின் மகள் நியதி, விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் தேவதர்ஷினியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
முதல் திரைப்படத்திலேயே இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.இதனைப் பார்த்த ரசிகர்கள் 96 படத்தில் நடித்த சிறுமியா இது என்று கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
