கர்ப்பமான பிறகு முதல் முறையாக காதலர் பற்றி மனம் திறந்த நடிகை இலியானா… வைரலாகும் பதிவு…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கர்ப்பமான பிறகு முதல் முறையாக காதலர் பற்றி மனம் திறந்த நடிகை இலியானா… வைரலாகும் பதிவு…!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை இலியானா. இவர் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் இலியானா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

Advertisement

ஆனால் தான் கர்ப்பமானதற்கு யார் காரணம் கணவர் யார் என்பதை அவர் இதுவரை அறிவிக்கவில்லை. சமீபத்தில் கூட தனது காதலருடன் கைகோர்த்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தனது காதலரை பற்றி அழகான பதிவு ஒன்றை இலியானா பகிர்ந்துள்ளார்.அதே சமயம் ஒரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் அவர் யார் என்பது சரியாக தெரியவில்லை.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ileana D’Cruz இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ileana_official)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in