LATEST NEWS
ஏர்போர்ட்டுக்கு கையில் தலையணையுடன் வந்த நடிகை ஜான்வி கபூர்…. வீடியோவை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்…!!!
இந்திய திரை உலகில் பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக தற்போது இவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய தாயைப் போலவே தற்போது தென்னிந்திய திரை உலகில் கலக்க தயாராகி விட்டார். இவர் முதன்முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார்.
இதனிடையே இணையத்தில் ஜான்வி கபூர் குறித்த வீடியோக்கள் அடிக்கடி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது வழக்கம். தற்போது அவர் ஏர்போர்ட்டுக்கு கையில் தலையணையுடன் வந்திருந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் நீங்க பிளைட்டில் போறீங்க ரயிலில் இல்லை என்று கூறி வீடியோவை வைரலாகி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
