தசரா பட சூட்டிங் ஸ்பாட்டில் வித்தியாசமான லுக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ்…. வெளியான புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தசரா பட சூட்டிங் ஸ்பாட்டில் வித்தியாசமான லுக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ்…. வெளியான புகைப்படங்கள்…!!

Published

on

தெலுங்கில் ரங்கஸ்தலம் மற்றும் புஷ்பா போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர்தான் சுகுமார். இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒடேலா ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கிய முதல் திரைப்படம் தான் தசரா.

மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரான இந்த திரைப்படத்தில் நானி ஹீரோவாக நடித்திருந்தார்.

Advertisement

இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார்.

கடந்த மார்ச் ஒன்பதாம் தேதி தசரா திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியானது.

Advertisement

தமிழில் வெற்றி மாறனின் விடுதலை மற்றும் சிம்புவின் 10 தல ஆகிய படங்களுக்கு போட்டியாக ரிலீசான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற மைனர் வேட்டி கட்டி என்ற பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டது.

Advertisement

வசூலிலும் தசரா திரைப்படம் பல சாதனைகளை நிகழ்த்தியது. ஒரே வாரத்தில் இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

மேலும் தசரா திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை கொண்டாடும் விதமாக அந்த திரைப்படத்தின் இயக்குனருக்கு பிஎம்டபிள்யூ கார் ஒன்றை தயாரிப்பாளர் பரிசாக வழங்கினார்.

Advertisement

இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் சாய்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய வேதத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் தசரா திரைப்படம் 25 நாட்களை கடந்துள்ளதை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

Advertisement

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in