இஸ்லாமிய மக்களோடு பக்ரீத் பண்டிகையை கொண்டாடிய நடிகை குஷ்பு… இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இஸ்லாமிய மக்களோடு பக்ரீத் பண்டிகையை கொண்டாடிய நடிகை குஷ்பு… இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் தென்னிந்திய மொழிகளை தாண்டி இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சமீப காலமாக இவர் அதிக அளவு படங்களில் நடிப்பதில்லை.

இவர் இறுதியாக வாரிசு திரைப்படத்தில் நடித்ததாக கூறப்பட்ட நிலையில் இவர் நடித்த காட்சிகள் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன.

Advertisement

தற்போது பாஜகவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பூ பதவி வகித்து வருகிறார். அரசியலில் ஆக்டிவாக இருப்பதைப் போலவே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர்.

அதன்படி இன்று உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நடிகை குஷ்பூ பக்ரீத் பண்டிகையை கொண்டாடியுள்ளார். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மசூதிக்குச் சென்ற நடிகை குஷ்பூ அங்கு எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in