37 வருஷமா அந்த ஒரு விஷயத்துல என் கணவர் செலக்சன் தான்… நடிகை லட்சுமி பகிர்ந்த சுவாரசிய தகவல்..!! - cinefeeds
Connect with us

VIDEOS

37 வருஷமா அந்த ஒரு விஷயத்துல என் கணவர் செலக்சன் தான்… நடிகை லட்சுமி பகிர்ந்த சுவாரசிய தகவல்..!!

Published

on

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை லட்சுமி. இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படத்தில் அடக்கமான மருமகளாக நடித்து புகழ்பெற்றவர். இந்த திரைப்படத்திற்கு முன்பு பல நூறு படங்கள் லட்சுமி நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதேசமயம் பிலிம்பேர் விருதுகள், கர்நாடக அரசு விருதுகள், கேரளா அரசு விருது மற்றும் தெலுங்கு சினிமாவின் நந்தி விருது என எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார். இவர் கேரளாவை சேர்ந்த இன்சூரன்ஸ் கம்பெனியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளார். அவரும் ஒரு நடிகை தான். சூர்யா நடிப்பில் வெளியான ஆறு திரைப்படத்தில் ரவுடி பொம்பளை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் தான் ஐஸ்வர்யா.

Advertisement

இந்நிலையில் தற்போது சினிமாவிலிருந்து விலகி இருக்கும் நடிகை லட்சுமி சமீபத்தில் ஒரு பேட்டியில் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் தனக்கு 37 வருடமாக தன்னுடைய கணவர் தான் புடவை செலக்ட் பண்ணி தருவார் என கூறி பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Say Swag இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sayswag_official)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement