VIDEOS
மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்காக ராஜ்கிரண் செய்த செயல்… பலரும் அறியாத சுவாரஸ்ய சம்பவம்..!!

தமிழ் சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மாரிமுத்து சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதாவது அஜித்துடன் வாலி திரைப்படம் தொடங்கி மாறி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகர் மாரிமுத்து குணசித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். அதே சமயம் இவர் நடித்து முடித்துள்ள பல திரைப்படங்களும் அடுத்தடுத்து வழியாக உள்ளன.
. குறிப்பாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைப் போலவே இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ள நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டப்பிங் பணியின் போது மாரடைப்பால் மாரிமுத்து உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் மாரிமுத்து குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் சேயார் பாலு சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், ஒரு நாள் ராஜ்கிரனுடன் படப்பிடிப்பிற்கு செல்லும் போது மாரிமுத்துவை பார்த்து ராஜ்கிரன் நீங்க ஃபிளைட்டில் போய் இருக்கீங்களா என்று கேட்டுள்ளார். அப்போது நான் எங்க சார் போயிருக்க கீழ இருந்து மேல அண்ணாந்து பார்த்திருக்கேன் என்று மாரிமுத்து கூறிய நிலையில் மாரிமுத்துவுக்கு மட்டும் ராஜ்கிரண் ஃப்லைட் டிக்கெட் போட்டு கொடுத்துள்ளார். முதன் முதலில் மாரிமுத்துவை வானத்தில் பறக்க வைத்தது ராஜ்கிரன் என கூறியுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க