LATEST NEWS
அழகில் அம்மாவையே மிஞ்சும் நடிகை மதுபாலாவின் 2 மகள்கள்….. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்களில் ஒருவர்தான் நடிகை மதுபாலா. இவர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அழகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வானமே எல்லை, ரோஜா, ஜென்டில்மேன் மற்றும் செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
இப்படி பிசியான நடிகையாக இருந்த இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அமையா மற்றும் கெயா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை மதுபாலா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் தற்போது நாயகி போல பெரியவர்களாக வளர்ந்துள்ள மதுவின் மகள்களின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஹீரோயின் ரேஞ்சில் இருக்காங்களே நடிக்க வருவார்களா என கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
