LATEST NEWS
46 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை மீனா… க்யூட் புகைப்படங்கள்…!!!
தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இதனிடையே கடந்த வருடம் ஜூன் மாதம் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பிறகு கணவர் மரணத்தின் தாக்கத்திலிருந்து வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிய மீனாவை அவரின் தோழிகள் தான் வெளியே கொண்டு வந்து தேற்றினர்.
சமீபத்தில் கூட நடிகை மீனா திரையுலகில் வெற்றிகரமாக 40 வருடங்கள் நிறைவு செய்ததற்கு மிகப்பெரிய விழா எடுத்து கொண்டாடப்பட்டது. இதனிடையே இணையத்தில் தற்போது ஆக்டிவாக இருந்து வரும் மீனா அடிக்கடி தனது மகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
