LATEST NEWS
இலங்கையில் ட்ரெண்டியான உடையில் சுற்றிய…. வீடியோவை வெளியிட்ட நடிகை பூஜா ஹெக்டே…!!!
தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. முகமூடி படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் தளபதி விஜய் உடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.
அடுத்ததாக சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் பூஜா ஹெக்டே மற்றும் சல்மான்கான் இடையே காதல் மலர்ந்ததாக பல செய்திகள் உலா வந்தன.
ஆனால் இது தொடர்பாக இருவருமே எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனிடையே தற்போது பூஜா ஹெக்டே இலங்கைக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளார்.அவர் இலங்கையில் ட்ரெண்டிங்கான உடையில் சுற்றிய வீடியோவை தற்போது வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
